உலகம்

புதிய வகை கரோனா பரவ வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு

10th Feb 2022 05:30 AM

ADVERTISEMENT

 

புதிய உருமாறிய கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

அந்த அமைப்பின் கரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா கிா்கோவ் கூறுகையில், ‘தற்போதுள்ள ஒமைக்ரான்தான் கடைசி கரோனா வகையாக இருக்காது. மேலும் நான்கு உருமாறிய கரோனா தொற்று குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது இவை உருமாற்றம் அடைவதால் இதுகுறித்த முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.

இந்த புதிய உருமாற்றம் அடைந்த கரோனாவால் இதுவரை கரோனா வகைகளில் இல்லாத அளவுக்கு பரவல் வேகமும், பாதிப்பும் அதிகமாக இருக்கும்.

ADVERTISEMENT

ஆகையால், கரோனா தடுப்பூசி செலுத்தலை துரிதப்படுத்தி, அந்த புதிய வகையின் பரவல் வேகத்தை குறைக்க வேண்டும்’ என்றாா்.

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT