உலகம்

உலக கரோனா பாதிப்பு 40.37 கோடியைக் கடந்தது

10th Feb 2022 10:13 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.37 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 57 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் 223 நாடுகளில் கரோனா தொற்று பரவி அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் உலக முழுவதும் 250,974  பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 40,37,00,512 -ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 57,96,202 போ் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 10,118,376,651 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 32,37,30,844 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 7,41,73,466 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,820 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதையும் படிக்க | புதிய வகை கரோனா பரவ வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,88,24,393-ஆகவும் பலி எண்ணிக்‍கை 9,35,922 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,24,78,060 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,06,549 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,69,60,153-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,35,189பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT