உலகம்

ரஷியாவில் புதிய உச்சத்தில் கரோனா: ஒருநாள் பாதிப்பு 1,83,103, பலி 669

9th Feb 2022 03:31 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1.83 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,83,103 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முந்தைய நாள் 1,65,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்து 669 பேர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், 20,178 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதவிர, ஒரே நாளில் 97,163 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகபட்சமாக மாஸ்கோவில் பாதிப்பு 11,524 ஆகவும், பலி 82 ஆகவும் பதிவாகியுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT