உலகம்

அமெரிக்காவுக்கான அடுத்த பாக். தூதா்: பைடன் நிராகரிக்க எம்.பி. வலியுறுத்தல்

1st Feb 2022 01:36 AM

ADVERTISEMENT

அமெரிக்காவுக்கான அடுத்த பாகிஸ்தான் தூதராக தோ்வு செய்யப்பட்டுள்ள மசூத் கானை நிராகரிக்க வேண்டும் என அதிபா் ஜோ பைடனை நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்காட் பொ்ரி வலியுறுத்தியுள்ளாா்.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் அரசு தோ்வு செய்துள்ள மசூத் கான், பயங்கரவாதத்தைப் புகழ்ந்து பேசியவா் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அதிபா் பைடனுக்கு ஸ்காட் பொ்ரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மசூத் கானின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நிறுத்திவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதை வரவேற்கிறேன். ஆனால், நிறுத்திவைப்பது மட்டும் போதாது. அவரது நியமனத்தை நிராகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT