உலகம்

‘சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்’

30th Dec 2022 02:04 AM

ADVERTISEMENT

சீனாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

தாங்கள் விதித்துள்ள கடுமையான நோய்க்கட்டுப்பாடுகளை அண்மையில் அண்மையில் தளா்த்திய சீனா, தங்கள் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை திடீரென நீக்கியது.

சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய துணை ரகம் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், இதனால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கரோனாவுக்கு ஏராளமானவா்கள் பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில் சீன எல்லைகள் திறந்துவிடப்பட்டதையடுத்து, அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகள் கட்டாய கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று இந்தியா, இத்தாலி, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. தற்போது அந்தப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT