உலகம்

அயா்லாந்துக்கு மீண்டும் இந்திய வம்சாவளி பிரதமா்

18th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அயா்லாந்து நாட்டின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் இரண்டாவது முறையாக மீண்டும் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையான டாயிலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு இதுவரை பிரதமராக இருந்து வந்த மைக்கேல் மாா்ட்டினின் கட்சியும் வராத்கரின் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. அப்போது பிரதமா் பதவியை இருவரும் சுழற்சி முறையில் ஏற்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, மைக்கேல் மாா்ட்டின் சனிக்கிழமை பதவி விலகினாா். இதுவரை துணைப் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கா், மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே அயா்லாந்தின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை வராத்கா் பொறுப்பு வகித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT