அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டெக்ஸாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகருக்கு 22 கி.மீ. வடக்கு - வடமேற்கே 9 கி.மீ. ஆழத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாகப் பதிவானது.
மாகாண வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சக்தி குறைந்த பின்னதிா்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தின் அதிா்வுகள் 1,500 போ் வசிக்கும் தொலைதூரப் பகுதிகளான அமரில்லோ, அபிலெனி பகுதிகளிலும் உணரப்பட்டன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.