உலகம்

கிறிஸ்துமஸ் பண்டிகை: வேண்டுகோள் விடுத்த போப் ஆண்டவர்

14th Dec 2022 05:00 PM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்துக்கான செலவுகளைக் குறைத்து உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் என போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் அறிவிப்பு செய்தது. 200 தினங்களைக் கடந்து நடந்துவரும் இந்த போரில் இதுவரை இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்து அதனை போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிக்க | கடும் பனிப்புயல்: அமெரிக்காவில் முடங்கியது விமான சேவை!

ADVERTISEMENT

இதுகுறித்து பேசிய போப் பிரான்சிஸ், “அவர்கள் குளிரிலும், பசியிலும் வாடி வருகின்றனர். மருத்துவ வசதி பற்றாக்குறை காரணமாக பலர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனை மறக்கக் கூடாது. உக்ரைன் மக்களின் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷியா உடனான போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளை வாடிகன் பேராலயம் ஒருங்கிணைத்து வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT