உலகம்

எலான் மஸ்க் மீது டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள் வழக்கு

9th Dec 2022 02:36 PM

ADVERTISEMENT


டெஸ்லா  நிறுவனர் எலான் மஸ்க் மீது , டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் முன்னணி இடத்தில் இருந்த டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே அது சர்ச்சைகளில் முதன்மை இடத்துக்கு வந்தது.

இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்

எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, டிவிட்டர் நிறுவனத்திலிருந்து, சுமார் 7,500 ஊழியர்கள் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் வேலை விட்டு நீக்கப்பட்டனர், பலர் தாங்களாகவே வெளியேறினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டருக்கு எதிராக நாள்தோறும் நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகிறது. இதில், சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தை, சட்டத்துக்கு மாறாக படுக்கை அறைகளை உருவாக்கி, ஊழியர்கள் அலுவலகத்திலேயே தங்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT