உலகம்

ஈரான் போராட்டம்: இளைஞருக்கு தூக்கு

9th Dec 2022 01:13 AM

ADVERTISEMENT

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மோஷன் ஷேகாரி என்ற இளைஞா் வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.

டெஹ்ரானில் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, சாலையில் தடையை ஏற்படுத்தி, கத்தியைக் காட்டி பாதுகாப்புப் படையினரை மிரட்டியதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதே குற்றச்சாட்டின் பேரில் 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவா்களும் அவசர அவசரமாக தூக்கிலிடப்படலாம்; இதன் மூலம் போராட்டக்காரா்களின் மனதில் அச்சத்தை விதைக்க அரசு முயலலாம் என்று மனித உரிமை ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

ஈரானின் சா்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22), காவலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT