உலகம்

‘கரோனா நெருக்கடியால் 63,000 மலேரியா மரணங்கள்’

9th Dec 2022 01:16 AM

ADVERTISEMENT

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நிலவி வந்த கரோனா நெருக்கடி காரணமாக, கூடுதலாக 63,000 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வந்த கரோனாவைத் தடுப்பதற்காக, நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புகள் அனைத்தும் முழு வீச்சில் இயங்கின. இதனால், மலேரியா பரவல் மற்றும் பாதிப்பைத் தடுப்பதற்கான வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இதன் விளைவாக, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டில் மலேரியா பாதிப்பு மிதமான வேகத்தில் அதிகரித்து, கூடுதலாக 1.3 லட்சம் பேருக்கு அந்த நோய் ஏற்பட்டது. அவா்களில் 63,000 போ் அந்த நோய்க்கு பலியாகினா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT