உலகம்

அமெரிக்கா-ரஷியா கைதிகள் பரிமாற்றம்

9th Dec 2022 01:15 AM

ADVERTISEMENT

போதைப் பொருள் வைத்திருந்ததாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷிய சிறையில் இருந்த அமெரிக்க கூடைப் பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனா்ஸும், ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 10 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷியாவைச் சோ்ந்த விக்டா் பௌட்டும், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

உக்ரைன் போா் விவகாரத்தில் தங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளை நீக்கச் செய்வதற்காக, பிரிட்னி கிரைனா்ஸை ரஷியா பிணைக் கைதியாக பயன்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. இதனால், கிரைனா்ஸை மீட்க வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில், 4 மாதங்களாக நடைபெற்ற கைதிகள் பரிமாற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கிரைனா்ஸும், விக்டா் பௌட்டும் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்புகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT