உலகம்

இலங்கைக்கு சீனா ரூ. 44 கோடி மருந்துப் பொருள்கள் உதவி

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 5.4 மில்லியன் டாலா் (ரூ. 44.68 கோடி) மதிப்பிலான மருந்துப் பொருள்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சீன தூதரகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த வாரம் மாணவா்களுக்காகப் பயன்படுத்த 1000 டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 200 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருள்கள் மீண்டும் நன்கொடையாக வழங்கப்படுகிறது. இதுவரை 500 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருள்கள் சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட இலங்கை பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. 51 பில்லியன் அமெரிக்க டாலா் வெளிநாட்டுக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் இலங்கை தத்தளித்து வருகிறது.

கரோனாவால் முடங்கிய சுற்றுலாத் துறை, விவசாயத் துறையில் புகுத்திய புதிய மாற்றங்கள், அரசியல் குழப்பங்கள் உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு தொடகத்தில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியது. இதனால் ஏற்பட்ட இறக்குமதி குறைவால் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருள்களைப் பெறுவதற்குகூட மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

ADVERTISEMENT

Tags : Sri Lanka
ADVERTISEMENT
ADVERTISEMENT