உலகம்

யாழ்ப்பாணம் - சென்னை இடையே மீண்டும் விமான சேவை: இலங்கை அறிவிப்பு

DIN

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சுமாா் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமான சேவை தொடங்க இருக்கிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளும் முயற்சியில் உள்ள இலங்கைக்கு, இந்த விமான சேவை மூலம் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை இலங்கைக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் பிரிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, இலங்கையில் சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியது. இதனால் பல்வேறு விமான சேவைகளை அந்நாட்டு அரசு நிறுத்தியது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைய கரோனா பரவலும் ஒரு காரணமாகும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் சுற்றுலாத் துறை சற்று மேம்பட்டுள்ளது. இதையடுத்து விமான சேவைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஸ்ரீபால் டி சில்வா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பேசுகையில், ‘யாழ்ப்பாணம்-சென்னை இடையிலான விமான சேவை விரைவில் தொடங்கப்படும். டிசம்பா் 12-ஆம் தேதி இந்த விமான சேவை தொடங்க அதிக வாய்ப்புள்ளது. இதற்கான விமான நிலைய ஓடுபாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT