உலகம்

உலகத் தலைவர்களை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்: காரணம் என்ன?

7th Dec 2022 05:36 PM

ADVERTISEMENT

காலநிலை மாற்ற சிக்கல் தீவிரமடைந்துவரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள 650 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

காலநிலை மாற்ற பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருப்பது அபாயத்திற்கு இட்டுச் செல்லும் என குரல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

இதையும் படிக்க | அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் எரிபொருள் ஆற்றலுக்காக காடுகளை அழிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என 650க்கும் மேற்பட்ட சூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். 

ADVERTISEMENT

எரிபொருள் மூலங்களுக்காக காடுகளில் உள்ள மரங்கள் அழிக்கப்படுவதற்கு மாற்றாக புதிய ஆற்றல் மூலங்களை நோக்கி நகர வேண்டும் என கோரியுள்ள அவர்கள் கார்பன் சமநிலையை உலக நாடுகள் அடைய இத்தகைய முயற்சிகள் அவசியமானது எனத் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க | சர்தார் வெற்றி: இப்படி ஒரு பரிசா? படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கார்த்தி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளுக்கு எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், “2030ஆம் ஆண்டிற்குள் 30 சதவிகித கடல் மற்றும் நிலப்பரப்பை பாதுகாக்க உலகத் தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் மரபுசார் எரிபொருள் உற்பத்தியை குறைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT