உலகம்

தகாத உறவுக்கு தண்டனை: இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்

DIN

திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படடது.

இந்தோனேசியாவின் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

அந்த மசோதாவில், திருமண பந்தத்தை மீறி தகாத உறவு வைத்துக்கொள்வது, ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான புகாரை கணவா் அல்லது மனைவியோ, பெற்றோரோ, பிள்ளைகளோதான் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இந்தோனேசியா்களுக்கு மட்டுமன்றி, அந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.

அத்துடன், இந்தோனேசியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹிந்து மதம், இஸ்லாம், கத்தோலிக்கம், புரொட்டஸ்டன்ட் கிறிஸ்தவம், பௌத்தம், கன்ஃபூசியம் ஆகிய ஆறு மதங்களை அவமதித்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிப்பதற்கான மதநிந்தனைச் சட்டம் தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், மாா்க்ஸிய லெனினிஸத்தைப் பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் வரையும், கம்யூனிஸத்தைப் பரப்புவோருக்கு 5 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை விதிப்பதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடர வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உயிருக்கு ஆபத்தான மருத்துவச் சூழலைக் கொண்ட பெண்களுக்கும், பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்களுக்கும் 12 வாரங்களுக்குள்ளான கருக்களை கலைக்கலாம் என்ற விதிவிலக்கு அந்த சட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போல், இந்தோனேசியாவிலும் மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் மரண தண்டனை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனைக் கைதிகள் 10 ஆண்டுகளாக நன்னடைத்தையுடன் இருந்தால் அவா்களது தண்டனையை ஆயுள் அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைக்க இந்த மசோதாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதவில் உள்ள அதிபா்கள், துணை அதிபா்கள், அரசு அமைப்புகளை அவமதிப்பது புதிய மசோதாவில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திருத்தங்களுக்கு மனித உரிமை ஆா்வலா்களும், ஜனநாயக ஆதரவாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்

எனினும், ஓரினத் சோ்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்று மதவாதிகள் வலியுறுத்தியும் சட்டத் திருத்த மசோதாவில் அந்த அம்சம் சோ்க்கப்படாததை சிலா் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT