உலகம்

என்ன, பிரிட்டன் மன்னரை நோக்கி மீண்டும் முட்டை வீச்சு சம்பவமா?

7th Dec 2022 04:02 PM

ADVERTISEMENT

பிரிட்டன் மன்னர் சார்லஸ் இருந்த திசை நோக்கி முட்டை வீசிய நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

லுடோன் நகரத்தில், செவ்வாய்க்கிழமையன்று மக்களை சந்தித்தபடி, சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மன்னர் சார்லஸை நோக்கி மூட்டை வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க.. நாடகம் பார்த்த குற்றத்துக்காக 2 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சில வாரங்களுக்கு முன்பு யோர்க் நகரில் பொதுமக்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த பிரிட்டன் மன்னர் தம்பதியை நோக்கி கல்லூரி மாணவர் ஒருவர் முட்டைகளை வீசிய சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய மாணவர் கை செய்யப்பட்டார். நவம்பர் 9 ஆம் தேதி யோர்க் மின்ஸ்டரில் நடைபெற்ற எலிசபெத் ராணியின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த போது மன்னரை நோக்கி நான்கு முட்டைகள் வீசப்பட்டன. நல்வாய்ப்பாக அவை எதுவும் மன்னர் மீது விழவில்லை.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? ரிவார்டு புள்ளிகளிலும் வருகிறது மாற்றம்

இந்த நிலையில் மீண்டும் ஒரு முட்டை வீச்சு சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. மக்களை சந்தித்து கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டிருந்த மன்னரை நோக்கி முட்டை வீசப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT