உலகம்

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்:நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிதியை தமிழக அரசு விரைந்து ஒதுக்கீடு செய்யும் என சென்னை உயா் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தைச் சோ்ந்த குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் செங்கல்பட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு ஓய்வு அறைகள் நீதிமன்ற அறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட முடிவு செய்தும், இதுவரை அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்க கோரி கடந்த ஆகஸ்டில் அளித்த தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா்-கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டுவதற்கான திருத்திய திட்டம் மற்றும் மதிப்பீடுகளை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா், உயா்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் முத்துக்குமாா் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான நிதியை விரைவில் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT