உலகம்

வடக்கு ஆப்கனில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

6th Dec 2022 01:03 PM

ADVERTISEMENT

 

வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து அருகே குண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தலிபான்களால் நியமிக்கப்பட்ட பால்க் மாகாணத்தின் காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி கூறுகையில், 
மாகாணத் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் நடந்த குண்டுவெடிப்பிலும் ஏழு பேர் காயமடைந்தனர். 

ஹியரடன் எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் செல்லும் பேருந்து அருகே சாலையோரம் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. 

ADVERTISEMENT

இந்த குண்டுவெடிப்பில் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்புக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை,

மேலும், சாலையோரம் உள்ள கடைகள், பேருந்து மற்றும் பல வாகனங்கள் வெடித்துச் சிதறியதில் சேதமைடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT