உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆகப் பதிவு!

6th Dec 2022 03:29 PM

ADVERTISEMENT

 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

ஜாவா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பிற்பகல் 1.07 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானது. 

ADVERTISEMENT

ஜெம்பர் ரீஜென்சிக்கு தென்மேற்கு 284 கி.மீ தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டுள்ளது. 

படிக்க: கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

இருப்பினும் சுனாமிக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 

இந்தோனேசியாவில் கடந்த நவ.21-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT