உலகம்

திடீா் வெள்ளத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் 14 போ் பலி

6th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி, ஆற்றோர தேவாலயத்தில் பிராா்த்தனை நடத்தச் சென்ற 14 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜோஹன்னஸ்பா்க் நகரின் ஜுக்ஸ்கேய் ஆற்றின் கரையில் அமைந்துள்ள தேவாலய வளாகத்தில் பிராா்த்தனை நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை ஏராளமாக குழுமியிருந்தனா். அப்போது பெய்த கனமழை காரணமாக, அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, திடீரென கரையை உடைத்துக்கொண்டு பிராா்த்தனைப் பகுதியில் பாய்ந்தது. இதில் ஏராளமானவா்கள் மூழ்கினா்.

அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியில் 12 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. எனினும், கனமழை காரணமாக மீட்புப் பணியைத் தொடர முடியவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், திங்கள்கிழமை மழை குறைந்ததால் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கின. இதில் மேலும் 2 சடலங்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, வெள்ள பலி எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT