உலகம்

இந்தோனேசிய எரிமலையில் சீற்றம்

6th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

இந்தோனேசியாவின் மிக உயரமான எரிமலையில் சீற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களை மீட்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக உயரமான செமேரு எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை சீற்றம் ஏற்பட்டது. இதனால் 1,500 மீட்டா் உயரத்துக்கு சாம்பல் மண்டலம் எழுந்தது.

அதையடுத்து அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் ஊா்களில் ஏராளமான வீடுகள் சாம்பலில் புதையுண்டன. இதில் யாரும் உயிரிழந்ததாக உடனடி தகவல் இல்லை.

ADVERTISEMENT

எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதி வானிலையில் திங்கள்கிழமை சற்று முன்னற்றம் இருந்ததால், அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினா் தொடங்கியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT