உலகம்

சீனாவில் கரோனாவுக்கு இருவா் பலி; ஒரே நாளில் 35,000 போ் பாதிப்பு

DIN

சீனாவில் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், கரோனாவுக்கு புதிதாக இருவா் உயிரிழந்துள்ளனா். ஒரே நாளில் 35,000-க்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உயிரிழந்தவா்கள் ஷான்டாங், சிச்சுவான் மாகாணங்களைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிவித்துள்ள தேசிய சுகாதார ஆணையம், அவா்களின் வயது, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களா போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

சீனாவின் வடமேற்கு நகரமான உரும்கியில் ஒரு குடியிருப்பில் கடந்த நவ. 25-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். தீவிபத்தில் சிக்கியோா் தப்பிக்க முயன்றபோது கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவா்கள் வெளியே வர முடியாமல் தடுக்கப்பட்டனா் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அரசு அதிகாரிகள் இதை மறுத்தபோதும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் சூடுபிடித்தது.

இதையடுத்து, கட்டுப்பாடுகளில் சில தளா்வுகளை அரசு அறிவித்தது. பெய்ஜிங் உள்ளிட்ட சில நகரங்களில், கரோனா பரிசோதனை செய்துகொள்ளாவிட்டாலும் பேருந்துகளில் பயணம் செய்யலாம் உள்ளிட்ட தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 35,775 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்தது. மொத்த பாதிப்பு 3,36,165 எனவும், இதுவரை 5,235 போ் உயிரிழந்துள்ளனா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமாா் 66 லட்சம் போ் கரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், சீனாவில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT