உலகம்

ஹிஜாப் போராட்டத்தில் பெண்களுக்கு வெற்றி! ஈரானில் கலாசார காவல் பிரிவு கலைப்பு!

DIN


ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், ஈரானில் கலாசார கண்காணிப்பு காவல் துறை பிரிவு கலைக்கப்படுவதாக அந்நாட்டு நீதித்துறை அறிவித்துள்ளது.

கலாசார கண்காணிப்பு காவல் பிரிவுக்கும், நீதித்துறைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாஃபர் மோன்டாசெரி தெரிவித்துள்ளார். 

ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற இஸ்லாமிய விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க கலாசார கண்காணிப்பு காவல் பிரிவு உருவாக்கப்பட்டது.

ஹிஜாப் அணியாத பெண்களை, இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிராக நடப்பவர்களை அவர்கள் எச்சரித்து அல்லது தண்டனை கொடுத்து அனுப்புவார்கள். 

அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி  மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று, காவலர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

கலாசார கண்காணிப்பு காவல் துறையினர் அமினியை கைது செய்து 3 நாள்கள் காவலில் வைத்து தாக்கியுள்ளனர். அதில், தலையில் பலத்த காயமடந்த அமினி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் பலர் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும், காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் ஹிஜாபைக் கழற்றி தீயிட்டு எரித்தனர்.

இந்த போராட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதலே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் முகமது ஜாஃபர் மோன்டாசெரி, கலாசார கண்காணிப்பு காவல் துறை பிரிவு கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

நீதித் துறைக்கும் கலாசார கண்காணிப்பு காவல் துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், அந்தப் பிரிவை அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மதம் சார்ந்த மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 

அவரின் இந்தக் கருத்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT