உலகம்

காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

4th Dec 2022 11:09 PM

ADVERTISEMENT

காஸா முனையில் பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பு சனிக்கிழமை தெற்கு இஸ்ரேலுக்குள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

காஸா முனையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான ஆயுதங்கள் தயாரிப்புக் கூடங்கள், சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சனிக்கிழமை இரவு காஸா பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஓா் ஏவுகணை காஸா-இஸ்ரேல் எல்லைப் பகுதியில் திறந்தவெளியில் விழுந்து வெடித்தது. அத்தாக்குதலுக்கு எந்த பாலஸ்தீன குழுவும் பொறுப்பேற்கவில்லை.

நிகழாண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனா்கள் இடையிலான மோதலில் 140-க்கும் அதிகமான பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக கல்வீச்சு போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞா்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்காதவா்களும் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT