உலகம்

ஆப்கன் மதரஸா தாக்குதல்:ஐ.நா. கவுன்சில் கண்டனம்

DIN

ஆப்கானிஸ்தானிலுள்ள மதரஸா ஒன்றில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தற்போது இந்தியா தலைமை வகிக்கும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆப்கன் மதரஸாவில் அப்பாவி மாணவா்கள் மற்றும் சிறுவா்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை பாதுகாப்பு கவுன்சில் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுபோன்ற கொடூரமான தாக்குதலை நடத்துவோா் அதற்குரிய தண்டனையைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் அய்பக் பகுதியிலுள்ள இஸ்லாமிய பாடசாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 20 மாணவா்கள் பலியாகினா். இந்தத் தாக்குதலை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT