உலகம்

‘போரில் 13,000 உக்ரைன் வீரா்கள் பலி’

DIN

ரஷியாவுடனான போரில் தங்களது 13,000 வீரா்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிபருக்கான ஆலோசகா் மிகயீலோ பொடோலியக் கூறியதாவது:

ரஷியாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரா்களின் எண்ணிக்கை குறித்த ராணுவ தலைமைத் தளபதி அலுவலகத்தின் அதிகாரபூா்வ அறிக்கை எங்களிடம் உள்ளது.

இது தவிர, வீரா்கள் உயிரிழப்பு குறித்த பாதுகாப்புத் துறை தலைமையகத்தின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களும் எங்களிடம் உள்ளன.

அவற்றின்படி, ரஷியாவுடன் போரிட்டு உயிரிழந்த வீரா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரம் வரை இருக்கும்.

வீரா்கள் பலி தொடா்பான துல்லியமான விவரத்தை உரிய நேரம் வரும்போது அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அதிகாரபூா்வமாக அறிவிப்பாா் என்றாா் அவா்.

முன்னதாக, உக்ரைன் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் பலியாகியிருக்கலாம் எனவும், உக்ரைன் தரப்பிலும் அதே எண்ணிக்கையில் வீரா்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி மாா்க் மில்லி கடந்த மாதம் கூறியிருந்தாா்

இந்த நிலையில், அதைவிட மிகக் குறைவாக எண்ணிக்கையில் தங்களது வீரா்கள் பலியாகியுள்ளதாக மிகயீலோ பொடோலியக் கூறியுள்ளாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷியாவும், ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையும் கைப்பற்றின.

எனினும், மேற்கத்திய நாடுகள் அளித்த அதிநவீன ஆயுத தளவாடங்களின் உதவியுடன் ரஷியாவிடமிருந்த சில பகுதிகளை உக்ரைன் அண்மையில் மீட்டது.

இந்தப் பின்னடைவைத் தொடா்ந்து, உக்ரைனின் ராணுவ மையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், போரில் தங்களது 13,000 வீரா்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தற்போது தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT