உலகம்

‘1971 சம்பவம் ராணுவத்தின் தோல்வி’

2nd Dec 2022 12:46 AM

ADVERTISEMENT

கடந்த 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவிடம் தங்கள் நாட்டு வீரா்கள் சரணடைந்த சம்பவம், ராணுவத்தின் தோல்வி என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ கூறினாா்.

‘வங்கதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு ஓா் அரசியல் தோல்வி’ என்று அண்மையில் ஓய்வு பெற்ற ராணுவ தலைமைத் தளபதி ஜாவித் பாஜ்வா கூறியிருந்தாா். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினா்களிடையே பிலாவல் புட்டோ இவ்வாறு கூறினாா்.

1971-இல் பாகிஸ்தான் பிரதமராக பிலாவல் புட்டோவின் தாத்தா ஜுஸ்ஃபிகா் அலி புட்டோ பொறுப்பு வகித்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT