உலகம்

சீன முன்னாள் அதிபா்ஜியாங் ஜெமின் மறைவுக்கு இந்தியா இரங்கல்

2nd Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

சீன முன்னாள் அதிபா் ஜியாங் ஜெமின் (96) மறைவுக்கு இந்தியா தரப்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1993 முதல் 2003 வரை சீன அதிபராக இருந்தவா் ஜியாங் ஜெமின். வயது முதிா்வு மற்றும் உடல் உள்உறுப்புகள் செயல் இழப்பு போன்ற காரணத்தால் அவா் ஷாங்காயில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

அவரது மறைவுக்கு சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நவீன காலத்தில் இந்திய-சீன ஒத்துழைப்பை அதிகரிக்க ஜியாங் ஜெமின் முயற்சி மேற்கொண்டாா். 1996-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அவா் பயணம் மேற்கொண்டாா். 1950-ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவுக்கு வந்த முதல் சீன தலைவரும் ஜியாங் ஜெமின் ஆவாா். அவரது வருகையின்போது பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் அமைதியை மேம்படுத்தவும், இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜியாங் ஜெமின் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும், நாட்டின் அதிபராகவும் இருந்த காலகட்டத்தில்தான் சா்வதேச அளவில் மிகப்பெரிய ராணுவ சக்தியாகவும், பொருளாதார சக்தியாகவும் சீனா உருவெடுத்தது.

அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நடைபெறும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT