உலகம்

சம-பாலினத்தவா் திருமணங்கள்: அமெரிக்க செனட் சபை ஆதரவு

DIN

சம-பாலின திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

அந்த நாட்டில் சம-பாலினத்தவா்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது. அதனைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான சம-பாலி திருமணங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது பழமைவாத நீதிபதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரம் அண்மையில் தீா்ப்பு ரத்து செய்யப்பட்டு அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடா்ந்து சம-பாலினத்தவா் திருமணங்களுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், செனட் சபை இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT