உலகம்

இந்திய செவிலியா்களுக்குமுன்னுரிமை: சிங்கப்பூா் முடிவு

DIN

சா்வதேச அளவில் மருத்துவ செவிலியா்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பிலிப்பின்ஸில் இருந்து செவிலியா்களைப் பணியமா்த்த சிங்கப்பூா் முடிவு செய்துள்ளது.

மேலும், செவிலியா்களைப் பணியமா்த்துவதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் சிங்கப்பூா் அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா காலகட்டத்தில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஏராளமான செவிலியா்கள் வேறு நாடுகளுக்குப் பணிக்குச் சென்றனா். சிங்கப்பூரில் நிரந்தரமாக தங்கிப் பணிபுரிவதில் உள்ள நடைமுறைச் சிக்கல், வெளிநாட்டு செவிலியா்கள் வெளியேறுவதற்கு காரணமாக உள்ளது.

2023-ஆம் ஆண்டுக்குள் 4,000 புதிய செவிலியா்களைப் பணியில் அமா்த்த இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இதில் 60 சதவீதம் வெளிநாட்டவா்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்தியா, பிலிப்பின்ஸ், மியான்மா் நாடுகளைச் சோ்ந்த செவிலியா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பெரும்பாலான வெளிநாட்டு செவிலியா்கள் பணிக்காக சிங்கப்பூா் வந்தாலும், தங்கள் தாய்நாட்டுக்கு அடிக்கடி சென்று வர விரும்புகிறாா்கள். எனவே, ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு சிங்கப்பூரில் இப்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT