உலகம்

தற்கொலைத் தாக்குதல்: பாகிஸ்தானில் 3 போ் பலி

1st Dec 2022 01:37 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: துணை ராணுவப் படையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் புதன்கிழமை சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது குவெட்டா நகரின் பலேலி பகுதியில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினாா். இதில் 3 போ் உயிரிழந்தனா். ஒரு பெண், குழந்தை, பாதுகாப்புப் படை வீரா்கள் 20 போ் உள்பட 23 போ் காயமடைந்தனா்.

பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த அப்துல் வாலி என்கிற ஒமா் காலித் குராஸ்னி ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT