உலகம்

ஐ.எஸ். தலைவா் அபு அல்-ஹஸன் தாக்குதலில் உயிரிழப்பு

1st Dec 2022 01:49 AM

ADVERTISEMENT

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு அல்-ஹஸன் சமீபத்தில் நடந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட ஆடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா் இறப்பு குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வடமேற்கு சிரியாவில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, ஐ.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவா் அபு இப்ராஹிம் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அபு அல்-ஹஸன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றாா்.

இப்போது அவரும் கொல்லப்பட்டது அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருடைய கொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. அமைப்பின் அடுத்த தலைவராக அபு அல்-ஹுசைன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடா்பாளா் அபு ஒமா் அல்-முஹாஜா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ஐ.எஸ். அமைப்பின் நிறுவனா் அபு பக்கா் அல்-பாக்தாதி கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டாா். இந்த அமைப்பு சிரியா மற்றும் இராக் நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT