உலகம்

ரஷிய போா்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: இயு பரிந்துரை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உக்ரைன் போரில் ரஷியாவின் போா்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் சட்டம், நிதி மற்றும் அரசியல் விவகாரங்களை கவனித்து வரும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் புதன்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷியப் படையினா் போா்க் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடா்பான விசாரணையை நடத்துவதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே செயல்பட்டு வரும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைந்து அந்த நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க விரிவான சா்வதேச ஆதரவைப் பெறுவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT