உலகம்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 16 மாணவர்கள் பலி!

1st Dec 2022 09:17 AM

ADVERTISEMENT


ஆப்கானிஸ்தான் சமங்கன் மாகாணத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொழுகையில் ஈடுபட்டிருந்து 16 மாணவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தில் உள்ள மதரஸாவில் வியாழக்கிழமை காலை நிகழந்த குண்டுவெடிப்பில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 16 மாணவர்கள் பலியாகி உள்ளனர். 24 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிக்க | ரஷிய போா்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: இயு பரிந்துரை

இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

அமெரிக்கா கண்டனம்: ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, குழந்தைகள் அச்சமின்றி கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT