உலகம்

இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவி! 

27th Aug 2022 01:03 PM

ADVERTISEMENT

 

இலங்கை குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் உணவுப் பொருள்களை அமெரிக்காவின் வேளாண்துறை வழங்கியுள்ளது. 

கரோனாவிற்கு பிறகு இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததோடு, நிகழாண்டின் ஆரம்பத்திலிருந்து மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுக்கச் செய்தது. 

அமெரிக்காவின் வெளிநாட்டு தூதர் ஜூலி சங் இலங்கையின் கல்வித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயேனந்தா, சுகாதாரத்துறை மற்றும் திட்டக்குழு தலைவர், குழ்ந்தைகளை காப்போம் அமைப்பினர் முன்னிலையில் இதை வழங்கினார். இதுக்குறித்து அமெரிக்க வெளிநாட்டு தூதுவர் ஜூலி சங் தெரிவித்ததாவது: 

ADVERTISEMENT

இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க மக்களால் வழங்கப்படும் இந்த நன்கொடையின் நோக்கமானது பசியால் அவர்களது கல்வி தடைப்படக் கூடாதென வழங்குகிறோம். சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கை இதிலிருந்து மீண்டு வர அமெரிக்கா சத்துணவுப் பொருள்களை வழங்கி உதவி செய்கிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT