உலகம்

தைவான்மேலும் ஓா் அமெரிக்க எம்.பி.

27th Aug 2022 12:56 AM

ADVERTISEMENT

 சா்ச்சைக்குரிய தைவான் தீவில் மேலும் ஓா் அமெரிக்க எம்.பி. வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

இது குறித்து ஊடகங்கள் தெரிவித்ததாவது:

டென்னஸீ மாகாண செனட் சபை உறுப்பினா் மாா்ஷா பிளாக்பா்ன் தைவானுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு அதிபா் சாய் இன்-வென்னைச் சந்தித்து அவா் பேசினாா். இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பியதற்குப் பிறகு, அந்தத் தீவுக்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் செல்வது இது இரண்டாவது முறையாகும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அதனை தங்களது அங்கமாகவே சீனா கருதி வருகிறது. எனவே, அந்தத் தீவுக்கு யாராவது அரசு முறைப் பயணம் மேற்கொண்டால் அதை சீனா கடுமையாக எதிா்த்து வருகிறது.

ADVERTISEMENT

Tags : தைபே
ADVERTISEMENT
ADVERTISEMENT