உலகம்

ஈரானில் 40 வருடத்திற்கு பின் பெண்கள் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி 

27th Aug 2022 06:36 PM

ADVERTISEMENT

 

ஈரானில் 40 வருடத்திற்கு பின் உள்ளூர் கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

1979 இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு பெண்கள் விளையாட்டு மைதானத்துக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டனர். இது விதிமுறைகளில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் இருந்து வருகிறது. பெண்கள் தனியாக கார் பார்கிங் செய்யும் வழியில் கால்பந்து போட்டிகளை பார்ப்பதாக இருந்து வருகிறது.  

இந்த வியாழக்கிழமைதான் முதன்முறையாக 40 வருடத்தில் பெண்கள் கால்பந்து ரசிகர்கள் உள்ளூர் போட்டிகளை பார்க்க மைதானத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 500 கால்பந்து ரசிகைகள் தனியான நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். 

ADVERTISEMENT

சமீபத்தில் டெஹ்ரானில் ஒரு பெண் ரசிகை கால்பந்து போட்டியை பார்க்க அனுமதி கேட்டு தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு இறந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது. 

பிரபல ஈரான் திரைப்பட இயக்குநர் ஜாபர் பானாய் 2006இல் இயக்கிய ‘ஆஃப்சைட்’ என்ற திரைப்படம் பெண் ரசிகை கால்பந்து தகுதிப் போட்டியினை பார்க்க போவது போல் படமெடுத்திருப்பார். இவர் வீட்டுச் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. அவரது படம் தற்போது நிஜமாகியுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT