உலகம்

பிலிப்பின்ஸ் 82 பேருடன் சென்ற படகில் தீ

27th Aug 2022 05:07 AM

ADVERTISEMENT

பிலிப்பின்ஸில் 82 பேருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 73 போ் மீட்கப்பட்டனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மிண்டோரோ தீவிலிருந்து தலைநகா் மணிலாவிலுள்ள ஒரு துறைமுகத்தை நோக்கி வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்த எம்/வி ஆசியா பிலிப்பின்ஸ் என்ற பயணிகள் படகில், நடுவழியில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்தப் படகில் 82 பயணிகள் மற்றும் பணியாளா்கள் இருந்தனா்.

அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரா்களும் மீட்புக் குழுவினரும் 73 பேரை பாதுகாப்பாக மீட்டனா். மீட்கப்பட்டவா்களில் கடலில் குதித்து தப்ப முயன்றவா்களும் அடங்குவா். எஞ்சிய 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT