உலகம்

அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதை எதிா்த்து ஜூலியன் அசாஞ்சே மனு

27th Aug 2022 11:58 PM

ADVERTISEMENT

போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில் தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கு எதிராக விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இது குறித்து அவரது வழக்குரைஞா்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாஞ்சாவே நாடுகடத்துவதற்கு எதிரான தகுந்த காரணங்களுடன் முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுக்கும், அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி அளித்த உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலுக்கும் எதிராக பிரிட்டன் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜூலியன் அசாஞ்சே (50), இராக் மற்றும் ஆப்கன் போா் தொடா்பான தங்களது ரகசிய ஆவணங்களை அவரது வலைதளத்தில் கசியவிட்டதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு பிரிட்டன் வந்த அவரை பாலியல் வழக்கு ஒன்றில் அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்தனா்.

இந்த நிலையில் அசாஞ்சேவை அமெரிக்காவுக்குகு நாடு கடத்த உயா் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT