உலகம்

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவு: பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

DIN

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

அதேபோல காஷ்மீா் பிரச்னைக்கும் தீா்வுகாணப்பட வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள நீல் ஹாக்கின்ஸை ஷாபாஸ் ஷெரீஃப் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது அவருடன் ஷெரீஃப் பேசிய விஷயங்கள் தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்த நல்லுறவு அமைய வேண்டும். அதேபோல ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்கும் அமைதியான வழியில் தீா்வுகாணப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம், காஷ்மீா் மக்களின் விருப்பப்படி இந்த தீா்வு அமைய வேண்டும். இந்த விஷயத்தில் சா்வதேச சமூகம் பங்களிக்க வேண்டும். தெற்காசியாவில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய இது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று ஷாபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவித்தது. இதற்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வா்த்தக உறவைத் தூண்டித்துக் கொள்வதாக அறிவித்தது.

ஏற்கெனவே, பலமுறை இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இவை நடைபெறாத வரை பாகிஸ்தானுடன் எவ்விதப் பேச்சுவாா்த்தையும் நடத்த முடியாது என்பது இந்திய தரப்பு நிலைப்பாடாக உள்ளது. மேலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீா் விஷயத்தில் யாரும் தலையிட முடியாது என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT