உலகம்

எத்தியோப்பியா: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு

19th Aug 2022 03:25 PM

ADVERTISEMENT

சூடானிலிருந்து எத்தியோப்பியா சென்று கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. 

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரிலிருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. 

அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் தானியங்கி விமானம் இயக்கியை செயல்படுத்திவிட்டு தூங்கியுள்ளனர். 

இந்நிலையில் அட்டிஸ் அபபா நகருக்குள் நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்தவொரு முன்னறிவிப்பையும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்தவண்ணம் இருந்தது.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சியடைந்த விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால் விமானிகள் கடுமையான உறக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டு அறையின் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. 

இந்நிலையில் தரையிறங்க வேண்டிய இடத்தைக் கடந்து விமானம் பயணித்ததால் தானியங்கி விமான இயக்கி பலத்த ஓசையை எழுப்பி நின்றுள்ளது. இந்த சத்தத்தினால் தூக்கம் கலைந்த விமானிகள் விமானத்தை திசை திருப்பி மீண்டும் ஓடுபாதைக்கு கொண்டு சென்று தரையிறக்கினர். 

விமானிகளின் தூக்கத்தால் 2.5 மணி நேரம் பயணிகள் வானில் பறந்தபடியே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பறக்கும் விமானத்தை சரியான இடத்தில் தரையிறக்காமல் தூங்கிக் கொண்டிருந்த விமானிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT