உலகம்

இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம்: பாகிஸ்தான் பிரதமர்

19th Aug 2022 06:06 PM

ADVERTISEMENT

இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய நாட்டுத் தூதரக அதிகாரியுடனான சந்திப்பின்போது இந்தியாவுடனான உறவு குறித்து ஷாபாஸ் ஷெரீஃப் பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க, ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான மற்றும் அமைதியான தீர்வு எட்டப்பட வேண்டும். இந்தியாவுடன் அமைதியான உறவுக்கே விரும்புகிறோம். நாட்டில் அமைதி நிலவ வேண்டும்.

தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்ல உறவு இருப்பது அவசியம்' என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷாபாஸ் புதிய பிரதமரானார். அப்போது அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவிக்க, நன்றி தெரிவித்த ஷாபாஸ், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாகக் கூறினார். 

இதையும் படிக்க | முதுகு வலியால் அவதியா? செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

ADVERTISEMENT
ADVERTISEMENT