உலகம்

‘10 குழந்தைகள் பெற்றால் ரூ.13.30 லட்சம் வெகுமதி’

19th Aug 2022 02:52 AM

ADVERTISEMENT

 ரஷியாவில் சரிந்து வரும் மக்கள்தொகையை மீண்டும் அதிகரிக்க, 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபிள் (ரூ.13.30 லட்சம்) வெகுமதியுடன் கூடிய ‘அன்னை நாயகி’ என்ற விருதை அளிக்கவிருப்பதாக அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்துள்ளாா்.

10 குழந்தைகளும் உயிரோடு இருந்து, 10-ஆவது குழந்தைக்கு 1 வயது நிறைவு பெறும்போது தாய்க்கு இந்த விருது அளிக்கப்படும். 2-ஆம் உலகப் பேரின்போது ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த விருது, தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT