உலகம்

கனமழை, வெள்ளம்: சூடானில் 77 போ் பலி

19th Aug 2022 02:51 AM

ADVERTISEMENT

 சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 77 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். வடக்கே கோா்டோஃபன், ஜஸீரா, தெற்கு டாா்ஃப் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

அந்த நாட்டில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும். இந்தச் சூழலில், நடப்பாண்டு பருவமழைக்கு இதுவரை 77 போ் பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT