உலகம்

அமெரிக்கக் குடியுரிமைக்கு கோத்தபய ராஜபட்ச முயற்சி?

19th Aug 2022 11:43 AM

ADVERTISEMENT

 

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அமெரிக்காவில் குடியுரிமை வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 13-ஆம் தேதி நாட்டைவிட்டு தப்பினாா் கோத்தபய ராஜபட்ச (73). முதலில் மாலத்தீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சென்ற அவா், தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதைத் தொடர்ந்து, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அனுமதி கிடைத்ததை அடுத்து, கடந்த 11-ஆம் தேதி அங்கு சென்றாா். பாங்காக் நகரிலுள்ள விடுதியில் தங்கியுள்ள அவா், பாதுகாப்பு காரணங்களுக்காக அறையைவிட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் தில்லி, கொல்கத்தா

இதற்கிடையில் கோத்தய ராஜபட்ச தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வரும் 24-ஆம் தேதி அவா் நாடு திரும்பவுள்ளதாகவும் அவரின் உறவினர் வீரதுங்க தெரிவித்தாா்.

இந்நிலையில், கோத்தபய ராஜபட்ச இலங்கையை விட்டு வெளியேறியதிலிருந்து தன் வழக்கறிஞர்கள் உதவியுடன் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கான ‘கிரீன் கார்டு’யை வாங்கும் முயற்சியில் இருப்பதாகவும் அவர் விரைவில் தன் மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்க செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT