உலகம்

போதையில் குத்தாட்டம்: சர்ச்சையில் ஃபின்லாந்து பிரதமர்

19th Aug 2022 04:29 PM

ADVERTISEMENT

 

ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் குடிபோதையில் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஃபின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின்(36) உலகின் இளவயது பிரதமராவார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளும் ஜனநாயக சமூக கட்சியின் சார்பில் அந்நாட்டின் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சன்னா தன் நண்பர்களுடன்  சேர்ந்து குடித்துவிட்டு போதையில் நடனமாடியதை விடியோ எடுத்த ஒருவர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

முழுபோதையில் சன்னா ஆவேசமாக ஆடும் காட்சிகளைக் கண்ட ஃபின்லாந்து அரசியல் கட்சியினர் மற்றும் மக்களில் சிலர் பிரதமராக இருக்க முற்றிலும் தகுதியற்றவர் என சன்னாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: எத்தியோப்பியா: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு

அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதுகுறித்து பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் சிலர் அரசிற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

சன்னா மரின்

இதுகுறித்து பிரதமர் சன்னா மரின், மது மட்டும்தான் அருந்தினேன். போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என்றும் பரிசோதனைக்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

சன்னா இப்படி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது புதிதல்ல. முன்னதாக, கரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோது இரவு முழுக்க பார்டிகளில் கலந்துகொண்டு மது அருந்தி சர்ச்சைக்கு ஆளானவர்.

மேலும், ‘இந்த பிரதமரைப் பார்க்கும்போது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். பிரதமரே இப்படியென்றால் மக்கள் என்ன மாதிரியான கொண்டாடத்தில் இருப்பார்கள்?’ என இணையவாசிகள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT