உலகம்

'கடந்த 4 வாரங்களில் கரோனா இறப்பு 35% அதிகரிப்பு' - உலக சுகாதார அமைப்பு தகவல்

18th Aug 2022 04:21 PM

ADVERTISEMENT

உலகத்தில் கடந்த 4 வாரங்களில் கரோனா இறப்பு 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது. தொற்று பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், 'கரோனா தொற்றுடன் வாழக் கற்றுக்கொண்டதால் தொற்று பாதிப்பு இல்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

இதையும் படிக்க |  'கரோனா இன்னும் இருக்கிறது; பூஸ்டர் தடுப்பூசி அவசியம்'

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கடந்த நான்கு வாரங்களில் கரோனா, குரங்கு அம்மை உள்ளிட்ட உலகளாவிய நோய்களால் தொடர்பான இறப்புகளில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் கரோனாவுக்கு 15,000 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கும்போது இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைப் பின்பற்றுங்கள்' என்று கூறினார். 

மேலும், குரங்கு அம்மை குறித்து பேசிய அவர், 'கடந்த வாரம் 7,500 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய வாரத்தைவிட பாதிப்பு 20% அதிகமாகும். தற்போது வரை 92 நாடுகளில் 35,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்' என்றார். 

இதையும் படிக்க | இதைச் செய்தால் நிதீஷ் குமாருக்கு ஆதரவு: பிரஷாந்த் கிஷோர் அறிவிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT