உலகம்

சூடானில் வெள்ளம்: 77 பேர் பலி, 14,500 வீடுகள் சேதம்

18th Aug 2022 05:05 PM

ADVERTISEMENT

சூடானில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14,500 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த மே மாதம் முதல் சூடானில் மழைக்காலம் தொடங்கியது. மே மாதத்தில் இருந்து தற்போது வரை  பெய்துள்ள கனமழையால் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சூடானின் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஜெனரலான அப்துல் ஜலீல் அப்துல் ரஹீம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மூன்றரை கி.மீ. நீள ‘வாசுகி’ சரக்கு ரயிலின் விடியோ

வடக்கு கோர்டோஃபான், ஜசீரா, தெற்கு கோர்டோஃபான், நைல் ஆறு பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஐநா அலுவலகம் சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 1,36,000 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஐநா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சூடானில் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

ADVERTISEMENT


கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சூடானில் 80க்கும் அதிகமானோர் பலியாகினர். அதேபோல, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT