உலகம்

10 குழந்தைகளைப் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: ரஷிய அதிபர் புதின்

18th Aug 2022 01:56 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசாகக் கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷியாவில் மக்கள்தொகையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக அதிபர் புதின் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு 13,500 பவுண்ட்(ரூ.13 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மிகப்பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கும் ரஷியா சமீப காலமாக மக்கள்தொகைப் பெருக்கத்தில் சரிவை அடைந்துள்ளதால் அதிபர் புதின் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சல்மான் ருஷ்டியை ஏன் கத்தியால் குத்தினேன்?: குற்றவாளி விளக்கம்

மேலும், 10-வதாக பிறக்கும் குழைந்தைக்கு 1 வயது நிறைவடைந்த உடன் இந்தத் தொகை கிடைக்கும் என்றும் போரில் அல்லது அவசரநிலையில் குழந்தைகளில் யாரேனும் உயிரிழந்தாலும் பரிசு கிடைக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

1940 ஆம் ஆண்டு முதலே மக்கள்தொகையை அதிகரிக்கும் பொருட்டு ரஷியாவில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT